Home   |    Contact Us   |    Member Registrations
DuraiNagarLogo              Hi ,Welcome to DuraiNagar

Welcome Durainagar

திருநெல்வேலி மாவட்டத்தில் தூத்துக்குடி என்னும் கத்தோலிக்க மறை மாவட்டத்தின் கீழ் வடக்கன்குளம் வட்டாரத்தில் சுமார் 150 ஆண்டுகள் கத்தோலிக்க கிறிஸ்துவ சமூகமாக வளர்ந்து வரும் அழகிய சிற்றூர் துரைகுடியிருப்பு பட்டாணித்துரை என்னும் முகம்மதிய இனத்தினர் ஒரு குடும்பம் முதலாகக் குடியிருந்து ஊரை அமைத்தனர். பின்பு பல்வேறு இடங்கலிருந்து வந்து அமர்ந்த நாடார் இன மக்கள் பட்டாணித் துரையின் நினைவாக துரைகுடியிருப்பு என்னும் பெயரால் தம் வாழிடத்தை அழைத்து மகிழ்ந்தனர்

img

About Chruch

கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று உணர்ந்த மக்கள் தம் ஊரில் ஒரு கத்தோலிக்க வழிபாட்டு தலம் அமைக்க விரும்பினர் வசதியான வாழ்க்கை நிலையோ பொருளாதார வளார்ச்சியோ இல்லாத காலம் அது. தெற்குகள்ளிகுளம் கத்தோலிக்க கிறிஸ்துவ பங்குடன் இணைந்த சிற்றூர் இது. அன்றைய கள்ளிகுளம் பங்குத் தந்தையாக இருந்த சுவாமி பீட்டர் புரூன் அவர்களின் உதவியூடன் புனித செபஸ்தியாரை பாதுகாவலராகக் கொண்டு 1891-ம் ஆண்டு தை மாதம் 6-ம் நாளில் ஓர் ஓலைக்கூரையிலான முதல் ஆலயம் இங்கு உருவானது. இதற்கான கல்வெட்டு ஆதாரமாயூள்ளது

img
DN Company Advertisement DN Advertisement

Wishes Display Here

About DN Friends

img

துரைகுடியிருப்பின் இரு இளந்தளிர்களாக இருந்த திரு. மார்ட்டின் அன்பரசு திரு. ஜாண் போஸ்கோ ஆகியோர் இணைந்து துரைநகரை வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்று கொண்டிருந்த பங்கு தந்தையர்கள் கன்னியர்கள் ஊர் பெரியவர்கள் ஆகியோருக்க உறுதுணையாக இளைஞர் படையை உருவாக்க 6 மாதமாக இரவூ பகல் என பாராமல் திட்டமிட்டு தொடங்கப் பட்டது தான் துரைநகர் இளைஞர் நற்பணி மன்றம். ...

Read more...

DN Convent

1978-ஆம் ஆண்டு ஜீன் மாதம் அருட்தந்தை ஆ. லூர்து மணி அடிகளார் அவர்களால் துரைகுடியிருப்பில் புனித அன்னம்மாள் கன்னியர் மடம் ஆன்மீகப்பணிக்காக கொண்டு வரப்பட்டது. அச்சபையினர் கேட்டுக் கொண்டதற்கிணங்க புனித வளன் நடுநிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் பொறுப்பை கன்னியர்களுக்கு கொடுக்க வேண்டும் என முடிவூ செய்யப்பட்டது.

Read more...

Durai Nagar Lunch New Sliding Panel
for QUCIK Access

DN QUCIK MENU
(Click Here)